அப்பாடக்கர் – புத்தக விமர்சனம்

399230_4994057012215_765535747_n

அப்பாடகர் – தம்பி கருத்தா பேசுவாப்பல….. ஒரு குறு நாவல். இந்தியாவின் முதல் Musical நாவல் வெளியிட்ட பாதையின் மற்றும் ஒரு வெளியிடு.

இது ஒரு வழக்கமான காதல் கதை ஆனால் சற்று வித்தியாசமாக.

இது ஒரு முக்கோண காதல் கதை (?) ஆனால் யாரும் எதிர்பார்க்காத திருப்புமுனையுடன்…….

ஆசிரியர் லிங்கம் அவர்களுக்கு இது முதல் புத்தகம். மிக தெளிவான நடை சகஜமான பேச்சு வழக்குடன் கதையை எழுதி இருகின்றார். முதல் புத்தகம் மிக அருமையாக வந்திருகின்றது. ஆசிரியருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நீங்கள் சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருகின்றது.

கதையை படிக்கும் போது உங்களை கதையின் ஒரு அங்கமாக உணரவைப்பதில் ஆசிரியர் வெற்றி பெறுகின்றார்.

ஒரு புத்தகத்திற்கு என்று பாடல் எழுதி அதை படமாகி அதை கதையுடன் இணைத்து தந்திருப்பது ஒரு புது அனுபவம்.

அந்த பாடலை காண புத்தகத்தை வங்கி படியுங்கள். புத்தகத்தில் பாடலுக்கான உரலி இடம்பெற்றிருக்கும்.

புத்தகத்தில் நட்பு, காதல், காமெடி என்று அனைத்தையும் சரியான விகிதத்தில் தந்திருப்பது பாராட்டுக்குரியது. இது தான் ஆரம்பம். ஆசிரியருக்கு இது முதல் நாவல் என்பதால் ஒரு சில குறைகள் இருக்கலாம். ஆனால் நிச்சியமாக நீங்கள் படித்து பார்க்க வேண்டிய ஒன்று.

உங்கள் முயற்சிகளில் நீங்கள் வெற்றிபெற மீண்டும் என்னுடைய வாழ்த்துக்கள் லிங்கம் அவர்களே………

புத்தகத்திற்கு என்னுடைய மதிப்பீடு 4/5.

 ~~வாழ்க வளமுடன்~~

வீக்எண்ட் கலாட்டா

நாள் : 02.03.2013 & 03.03.2013
 
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வந்தாலே எல்லோருக்கும் ஒரே சந்தோசம் தான் . எங்களுக்கும் இந்த விதியில் எந்த மாற்றமும் இல்லை. எங்களுக்கும் என்று நான் குறிப்பிட்டது – அரபாத் , இவான் பால் , ராஜா மற்றும் நான். வீக்எண்ட் பிளான் என்று எங்களிடம் ஒன்றும் இல்லை. ஆனால் நாங்கள் நினைத்து பார்க்காத அனைத்தும் நடந்துவிட்டது. சம்பளம் வேறு அப்போது தான் வந்திருநதது . சொல்லவா வேண்டும் எங்கள் சேட்டைகளை…….. 🙂 😀
 
முதலில் சனிக்கிழமை.
 
காலையில்  இருந்து வெட்டியாக நேரத்தை கழித்து  விட்டு மதியம் போனிக்ஸ் மால் போகலாம் என்று கிளம்பி போனோம். எனக்கு ஒரு Headphone வாங்க வேண்டும் என்பது தன பிளான். அனால் நடந்ததோ வேறு. மற்ற மூவரும் எதுவும் வாங்க வேண்டும் என்று நினைக்கவில்லை . மாலுக்குள் சென்றதும் அங்கு கடைகளை பார்த்ததும் சம்பளம் வந்து விட்டது நினைவுக்கு வந்ததும் அவர்களின் மனம் மாறி விட்டது. ஒரு துணி கடையில் போய்  புகுந்து விளையாடி விட்டனர். நான் வழக்கம் போல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன் (எதை என்று யாரும் கேட்கக்கூடாது… 😛 😛 ). 
 
எனக்கு நீண்ட நாளாக ஒரு ஆசை. Yonex Shuttle Racquet வாங்க வேண்டும் என்று. ஒரு படத்தில் லாட்டிரியில் பரிசு விழுந்தவுடன் கவுண்டமணி செந்தில் யிடம் “டாய் அந்த ரோடு என்னடா விலை…ஐயையோ நான் இப்போ எதாவது வாங்கியே ஆகணுமே “ என்று சொல்லுவார் . அந்த டயலாக் தான் எனக்கு நியாபகம் வந்தது. சரி அந்த Racquet யை இன்று வாங்கி  விடவேண்டும் என்று முடிவு செய்து மாலில் இருந்து வீடு திரும்பும் வழியில் ஒரு ஸ்போர்ட்ஸ் கடையில் நீண்ட நாள் ஆசையை நிறைவு செய்தேன். அனைத்து purchasegalum  முடிந்து வீடு திரும்பினோம்.
 
அடுத்து  ஞாயிற்றுக்கிழமை.
 
இன்றைக்கும் எந்த ஒரு பிளானும் கிடையாது shuttle விளையாடுவதை தவிர. நாம் நினைப்பது எல்லாம் எங்கே நடக்கின்றது …. திடிரென்று  ஒரு ஆசை … வீட்டில் மீன் தொட்டி  வைக்க வேண்டும் என்று. சரி வா போகலாம் என்று நாங்கள் நால்வரும் கிளம்பி போய் ஒரு குட்டி மீன் தொட்டியை வாங்கி வந்து வீட்டில் வைத்தோம். இதோ இது தான் அது.
Fish
 
இதோடு முடியவில்லை அன்றைய கதை. அரபாத்து கு ஒரு ஆசை. புது மொபைல் வாங்க வேண்டும் என்று. சரி வா போவோம் என்று கிளம்பி போய் பல கடைகளில் விசாரித்து கடைசியாக HTC Desire X  மொபைல் போன் வாங்கி வந்தோம். இதோ அந்த மொபைல்.
HTC
 
இரண்டு நாள். எந்த ஒரு பிளான் இல்லாமல் கையில் இருந்த காசு அனைத்தையும் காலி செய்தாகிவிட்டது. இதற்கு முக்கியமான காரணம் BSNL தான் . ஏன்  என்று கேட்கின்றிகளா …. ஏன் என்றால் வீட்டில் Broadband எடுக்கவில்லை. இன்டர்நெட்  மட்டும் இருந்திருந்தால் நாங்கள் ஏதோ ஒரு படத்தை டவுன்லோட் பண்ணி பார்த்து கொண்டிருந்திர்போம் இல்லை என்றல் வலை பூவில் கிறுக்கி கொண்டிருந்திருப்போம்.  😛 😀 🙂
 
எது எப்படியோ என்றும் இல்லாமல் அந்த இரண்டு நாட்களும் மிக சந்தோசமாக கழிந்தது. 🙂 🙂 🙂 🙂

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

கண் மூடி திறப்பதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது. புத்தாண்டு வரும் போது தான் அந்த வருடத்தில் நாம் என்ன செய்தோம் என்பதை நாம் நினைத்து பார்போம். இந்த வருடம் எனக்கு பசுமையான நினைவுகளுடன் முடிவடைகின்றது. உங்களுக்கும் அப்படியே இருக்கும் என்று எண்ணுகின்றேன்.

இனி வரும் புது வருடமும் அனைவர்க்கும் நன்றாகவே அமையும்.

இனி வரும் ஆண்டு என்ன செய்யலாம்? நிறைய திட்டங்கள் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் திட்டங்கள் போடுகின்றேன். சந்தர்ப சூழ்நிலையால் நிறைவேற்ற முடியாமல் போய் விடுகின்றது. இந்த வருடமும் அப்படி ஆகிவிட கூடாது.

வெளியே வெடி சத்தத்தை கேட்க முடிகின்றது. புத்தாண்டு கொண்டாடங்கள் கலை கட்ட தொடங்கிவிட்டது .

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவருடைய கனவுகளும் மெய்பட என்னுடைய வாழ்த்துக்கள்.

tamil_new_year3

வடு

எங்கோ இருந்து
மேகம் போல்
திரண்டு வந்தாய்..

என் வாழ்வில்
புயலாய் கடந்து
சென்றாய்..

நீ விட்டு
சென்ற
வடு மட்டும்
இப்போது   
என்னுள் ……

கண்ணாடி நிலவு

கண்ணாடி முகத்தை
பிரதிபலிப்பதை போல்
நிலவு என்
மனதை பிரதிபலிகின்றது….
முழு நிலவில்
நான் காண்பது
உன் முகத்தை……!!!

 

அப்பாடக்கர் – தம்பி கருத்தா பேசுவாப்ல

என்னுடன் ஒன்றாக வேலை பார்க்கும் திரு சுதர்சன்அவர்கள் அப்பாடக்கர்  –  தம்பி கருத்தா பேசுவாப்ல’ என்னும் நாவல் ஒன்றை எழுதிருகின்றார். அதற்காக ப்ரோமோ பாடல் ஒன்றையும் பாதை குரூப் மூலமாக ரிலீஸ் செய்திருகின்றார்கள். அந்த பாடல் தற்போது வெற்றிகரமாக youtube இல் ஓடிகொண்டிருக்கும் ‘Facebook Figurala Loosaanaen’ – This could be your facebook story ‘  பாடல். பாடலை காண கீழே பார்க்கவும்.
திரு சுதர்சன் அவர்களின் முதல் நாவல் வெற்றி பெற வாழ்த்துக்கள். வரும் ஜனவரி மாதம் நாவல் வெளிஇடபடுகின்றது.   

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

முன்பெல்லாம் 1000 ரூபாய்க்கு வெடி வாங்கினால் மூன்று நான்கு பைகள் நிறைய வெடி கிடைக்கும். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.

இப்போது சிறுவர்கள் வெடி வெடிப்பதை பார்க்கும் போது சிறு வயதில் பிஜிலி வெடி வெடிக்க பயந்த நியாபகங்கள் கண் முன்னே வந்து செல்கின்றன.

வெடி வெடிப்பது, நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, வித விதமாய் இனிப்புகள் உண்பது என்று ஒவ்வொரு தீபாவளியும் மிக சிறப்பாய்   நாம் கொண்டாடி வருகின்றோம். 

இந்த வருட தீபாவளி பண்டிகை ஏற்கனவே கலை கட்ட தொடங்கிவிட்டது. அனால் பள்ளி பருவத்தில் இருந்த அளவுக்கு கொண்டாட்டங்கள் இப்போது இருப்பதாக தோன்றவில்லை. காலம் மாறிவிட்டது. இளைய  தலைமுறையினர் இன்டர்நெட், smartphone என்று டெக்னாலஜி மாற்றத்திற்கு மாறிவிட்டனர். வெடி வெடிக்கும் ஆர்வம் இப்போது குறைந்துவிட்டது என்பது உண்மை.

இருந்தாலும் என்னை போன்று வெடி வெடிபவர்கள் வெடித்து கொண்டே தான் இருப்பார்கள்.

வெடி வெடிபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் தொலைகாட்சிகளில் வரும் சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்து ரசியுங்கள், குடும்பத்துடன், நண்பர்களுடன் நேரம் செலவிடுங்கள். இந்த தீப ஒளி திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.

அனைவர்க்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். 

       

அவள் ஒரு இயற்கை சீற்றம்

மழை வெள்ளத்தில்
மண் சரிவதை   
போல் 

புயல் காற்றில்  
மரம் முறிவதை 
போல்

சுனாமி அலையில் 
படகு கவிழ்வதை 
போல் 

அவளும் 
ஒரு
இயற்கை சீற்றம் தான்…

என்னை 
சாய்த்து விட்டால்…..